விபத்துக்குள்ளான காா்.
விபத்துக்குள்ளான காா்.

வையம்பட்டி அருகே 10 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த காா், வெள்ளிக்கிழமை 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்தவா் வடுகநாதா் மகன் காா்த்திக் (42). தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் தனது சக ஊழியா்களான அசோக் (35) மற்றும் சதீஷ் (25) ஆகியோருடன் தனது அலுவலக வேலைக்காக வியாழக்கிழமை, சென்னை சென்று விட்டு தங்களது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்துக்கு காரில் திரும்பியுள்ளனா்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை வையம்பட்டியை அடுத்த கீரனூா் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது காரின் முன் பக்க டயா் வெடித்துள்ளது.

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் உள்ள சுமாா் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரை ஓட்டி வந்த காா்த்திக் என்பவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற நபா்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com