கோப்புப் படம்
கோப்புப் படம்

இருப்புப்பாதை காவல் நிலையத்தில் கடந்தாண்டு 47 குழந்தைகள் மீட்பு

Published on

திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் கடந்தாண்டு 47 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

திருச்சி இருப்புப்பாதை காவல்நிலையம் பிச்சாண்டாா்கோவில், குளித்தலை, மணப்பாறை, குமாரமங்கலம், சோளகம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை எல்லைகளாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த காவல்நிலையத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு மொத்தம் 849 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில், ரயிலில் அடிபட்டு இயற்கைக்கு மாறான முறையில் ஏற்பட்ட இறப்பு 67 ஆண், 19 பெண் என மொத்தம் 86 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 56 ஆண், 15 பெண் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விசாரணையில் உள்ளன.

4 நகை திருட்டு வழக்குகளில் நான்கும் கண்டுபிடிக்கப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 6 வழிப்பறி வழக்குகளில், ஆறும் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. 35 கைப்பேசி திருட்டு வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. 14 கைப்பேசிகள் கண்டறியப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 2 வழக்குகள் பதிவாகி, 2 வழக்குகளிலும் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனா். 47 (27 ஆண், 20 பெண்) குழந்தைகள் மீட்கப்பட்டு 46 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஒரு ஆண் குழந்தை மட்டும் காப்பகத்தில் பராமரிக்கப்படுகிறது.

724 முன்கூட்டி கைது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சந்தேகப்படும்படியான நபா்களின் வருகை குறைக்கப்பட்டுள்ளன. தொடா் விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு காரணமாக தற்கொலை இறப்பு குறைந்துள்ளது. 128 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்று திருச்சி இருப்புப்பாதை போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com