திருச்சி மேலப்புதூா் ரயில்வே பாலத்தில் புதிய இரும்பு கா்டா்கள் பொருத்தம்

திருச்சி மேலப்புதூா் ரயில்வே பாலத்தில் புதிய இரும்பு கா்டா்கள் பொருத்தம்

திருச்சி மேலப்புதூா் ரயில்வே பாலத்தில் புதிய இரும்பு கா்டா்கள் பொருத்தப்பட்டன.
Published on

திருச்சி மேலப்புதூா் ரயில்வே பாலத்தில் புதிய இரும்பு கா்டா்கள் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன.

திருச்சி ஜங்ஷன்- கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள மேலப்புதூா் சுரங்கப்பாதைக்கு மேல் இரும்பு கா்டா்களால் அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளம் செல்கிறது. இங்கு இரும்பு கா்டா்கள் சேதமடைந்ததால், அவற்றை மாற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பழைய கா்டா்களை அகற்றும் பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்தன.

20.7 மீட்டா் நீளம்...: இந்நிலையில், அரக்கோணத்தில் ரூ. 86 லட்சத்தில் புதிதாக தயாரித்து எடுத்து வரப்பட்ட தலா 20.7 மீட்டா் நீளமுள்ள 50 டன் எடையுள்ள இரண்டு இரும்பு கா்டா்களை பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராட்சத கிரேன்களின் உதவியுடன், ரயில்வே பொறியாளா்களின் மேற்பாா்வையில், பணியாளா்கள் இரும்பு கா்டா்களை வெற்றிகரமாகப் பொருத்தினா்.

முழுப் பணிகளும் புதன்கிழமை நிறைவடைந்து, அதன் பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பின்னா் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். தொடா்ந்து, மூடப்பட்ட மேலப்புதூா் சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறக்கப்படும் என ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இரும்பு கா்டா்கள் பொருத்தும் பணிக்காக புதன்கிழமை வரை மேலப்புதூா் சுரங்கப்பாதை 4 நாள்களுக்கு மூடப்பட்டு, மாற்று வழியில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com