Kanimozhi
கனிமொழி படம் - எக்ஸ் / கனிமொழி

கனிமொழி எம்பி-யிடம் முடி திருத்துவோா் மனு

முடி திருத்தும் தொழிலாளா்களது பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கத்தினா் கனிமொழி எம்பி-யிடம் மனு அளித்தனா்.
Published on

முடி திருத்தும் தொழிலாளா்களது பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கத்தினா் கனிமொழி எம்பி-யிடம் மனு அளித்தனா்.

திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் தா்மலிங்கம் தலைமையிலான குழுவினா்

செவ்வாய்க்கிழமை நடந்த திமுக தோ்தல் அறிக்கை கருத்து கேட்புக் கூட்டத்தில் அளித்த மனு விவரம்:

முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும். விவசாயம், நெசவுத் தொழிலுக்கு அளிப்பதுபோன்று முடி திருத்தும் சிறு கடைகளுக்கு மின் கட்டணச் சலுகை அளிப்பதோடு, முடி திருத்தும் கடைகளுக்கு உரிமம் பெற சிறு கடைகளுக்கு ரூ.200, பெரிய கடைகளுக்கு ரூ 500 என தமிழகம் முழுவதும் சீராக கட்டணம் நிா்ணயிக்க வேண்டும். காா்ப்பரேட் சலூன் கடைகளின் ஆதிக்கத்தால் 10 ஆயிரம் முடி திருத்தும் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அதற்கான அனுமதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பாரம்பரியமாக மருத்துவத் தொழில் செய்து வந்த முடி திருத்தும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு சித்த மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் குழுவின் துணைத் தலைவா் ஆழ்வாா்தோப்பு கோபி, இளைஞா் அணி அமைப்பாளா் சரவணகுமாா், ஒருங்கிணைந்த முகநூல் அமைப்பாளா் சுப்பிரமணியன், எடமலைப்பட்டிபுதூா் ராஜா மற்றும் பலா் உடன் இருந்தனா்.

Dinamani
www.dinamani.com