திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கோப்புப்படம்.

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1. 14 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.14 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
Published on

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.14 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே. லெட்சுமணன். ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

முடிவில் முதன்மைக் கோயிலில் ரூ. 1,14, 54,854 ரொக்கம், 1 கிலோ 631 கிராம் தங்கம், 2 கிலோ 074 கிராம் வெள்ளி காணிக்கையாக வந்தது தெரியவந்தது. மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 6, 02,502 , உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் ரூ. 16, 252, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 5,166 காணிக்கை வந்தது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com