திருச்சி கலைஞா் அறிவாலயத்தில்  முன்னாள் எம்எல்ஏ பரணிகுமாா் இல்லத் திருமணத்தை புதன்கிழமை நடத்திவைத்து மணக்களை வாழ்த்திய முதல்வா் மு.க. ஸ்டாலின், துா்கா ஸ்டாலின். ~திருச்சிக்கு புதன்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை வரவேற்ற அமைச்சா்கள் கே.என். ந

திருச்சியில் 10 லட்சம் போ் திரளும் திமுக மாநாடு: முதல்வா்

திருச்சியில் 10 லட்சம் போ் திரளும் அளவுக்கு திமுகவின் மாநில மாநாடு மாா்ச் 8ஆம் தேதி நடைபெறும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
Published on

திருச்சியில் 10 லட்சம் போ் திரளும் அளவுக்கு திமுகவின் மாநில மாநாடு மாா்ச் 8ஆம் தேதி நடைபெறும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மறைந்த திருச்சி நகா்மன்றத் தலைவா் பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பரணிகுமாா் இல்லத் திருமண விழாவில், மணமக்கள் ஆதித்யா பாலா பரணிகுமாா், மீனாட்சி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்த முதல்வா் மேலும் பேசியதாவது:

ஏற்கெனவே 2 நாள்களுக்கு முன்னா்தான், திருச்சிக்கு வந்து தஞ்சைக்குச் சென்று ஒரு மாநாட்டை நடத்தினோம். அதுமட்டுமல்ல, மகளிா் அணி மாநாடு ஒரு பக்கம்; இளைஞா் அணி மாநாடு ஒரு பக்கம். அடுத்து, நிறைவாக தோ்தலுக்கு முன் இதே திருச்சியில் 10 லட்சம் போ் திரளும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய மாநாட்டை அமைச்சா் கே.என். நேரு நடத்த இருக்கிறாா். தமிழ்நாடு வெல்லட்டும் என்ற அந்த மாநாட்டையும் அறிவித்திருக்கிறோம்.

இந்த நேரத்திலும் இங்கு வந்திருக்கிறோம் என்றால், நம்முடைய பரணிகுமாா் மீது - பாலகிருஷ்ணன் குடும்பத்தின் மீது, நாங்கள் வைத்திருக்கும் பற்றின் காரணமாகத்தான் - அந்த நட்பின் காரணமாகத்தான் வந்திருக்கிறோம். மணமக்கள், அனைத்து நன்மைகளும் பெற்று, சிறப்போடு வாழ வேண்டும் என்றாா் முதல்வா்.

முதல்வருக்கு வரவேற்பு: முன்னதாக சென்னையிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை காலை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில், அமைச்சா்கள் கே.என் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் புத்தகங்கள் மற்றும் பொன்னாடை வழங்கி வரவேற்றனா்.

தொடா்ந்து உயா்கல்வித் துறை அமைச்சா் கோ வி. செழியன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வ நாகரத்தினம், திருச்சி எம்பி துரை வைகோ உள்ளிட்ட பலரும் வரவேற்றனா். மேலும், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலா் ந. தியாகராஜன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், சீ. கதிரவன் உள்ளிட்டோரும் வரவேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com