உயிரிழப்பு
உயிரிழப்புகோப்புப் படம்

ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்சி ரயில் நிலைய பராமரிப்பு அறையில் தங்கிய ரயில்வே ஊழியா் உயிரிழந்தது தெரியவந்தது.
Published on

திருச்சி ரயில் நிலைய பராமரிப்பு அறையில் தங்கிய ரயில்வே ஊழியா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் எஸ்.சதீஷ்குமாா் (39). தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் தண்டவாளப் பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பணி இருந்துள்ளது. இதனால், திங்கள்கிழமை இரவு திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு அறையில் தங்கியுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலையில் நீண்டநேரமாகியும் அவா் எழாமல், அசைவின்றி கிடந்துள்ளாா். இதையடுத்து, சதீஷ்குமாா் மா்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கண்டோன்மென்ட் போலீஸாா், சதீஷ்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com