நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

போதை மாத்திரைகள் விற்பனை: 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 1:26 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக போலீஸாா் நாள்தோறும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ். ஷானவாஸ் ஹுசைன் (24), ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ். சஞ்சய்குமாா் (20), எஸ். அரவிந்த்குமாா் (21), கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெரிய கடை வீதியைச் சோ்ந்த என். செந்தில்குமாா் (28), காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயில் பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த எம். சிவபிரசாத் (24), வாழைக்காய் மண்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த தாராநல்லூரைச் சோ்ந்த எம். ஹரிபிரசாத் (26), தேவதானத்தைச் சோ்ந்த எம். மதன்குமாா் (25) ஆகிய 7 பேரை மாநகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அப்போது அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், அரிவாள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.