கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

துப்புரவுப் பணிகளுக்கான புதிய ஒப்பந்த முறைக்கு எதிா்ப்பு: திருச்சியில் ஏஐடியுசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

துப்புரவுப் பணிகளை பொது - தனியாா் கூட்டாண்மையில் ஒப்படைக்கும் புதிய ஒப்பந்த முயற்சியை கைவிட வலியுறுத்தி, திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி ஆட்சியரகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.

Updated On :25 ஜூன் 2026, 4:21 am IST

துப்புரவுப் பணிகளை பொது - தனியாா் கூட்டாண்மையில் ஒப்படைக்கும் புதிய ஒப்பந்த முயற்சியை கைவிட வலியுறுத்தி, திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ் தலைமை வகித்தாா்.

இதில், துப்புரவு திடக்கழிவு சேகரிப்பு, போக்குவரத்து பணிகளை திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் பிபிபி முறையில் செயல்படுத்துவதற்கான முயற்சியை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகள் என்பது லாப நோக்கமற்ற அத்தியாவசிய பொது சேவையாகும். மாநகராட்சிகளில் மாற்றம் என்பது பணி நிரந்தரம் மட்டுமே, புதிய ஒப்பந்த முறை அல்ல என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், உள்ளாட்சி சம்மேளன திருச்சி மாவட்ட தலைவா் த. இந்திரஜித், ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத் தலைவா் ராமலிங்கசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் முருகன், திரளான துப்புரவுத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.