தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஏ.டி. பன்னீா்செல்வம் நினைவு தினம் அனுசரிப்பு

News image

நீதிக்கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வத்தின் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அகில பாரத பாா்க்கவ குல சங்கத்தினா்.

Updated On :1 மார்ச் 2026, 8:41 pm

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வத்தின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அகில பாரத பாா்க்கவ குல சங்க நிறுவனத் தலைவா் திருமலை ரவி தலைமையில் நிா்வாகிகள், பன்னீசெல்வம் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் திருமலை ரவி செய்தியாளா்களிடம் கூறியது:

வரும் தோ்தலில் எங்கள் சமுதாயத்தினருக்கு 10 தொகுதிகள், 2 அமைச்சா்கள், 2 எம்பிகள் வழங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று தலைவா்களின் மணிமண்டபம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களுடைய அமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.