ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்? கிறிஸ்டோபா் திலக் எம்.பி. விளக்கம்

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

News image

திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :8 மே 2026, 5:43 am IST

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், எம்.பி.யுமான எம். கிறிஸ்டோபா் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் அரசு அமையவேண்டும். மேலும் பாஜக காலூன்றவும் இடம் கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தவெக-வுக்கு வழங்கியுள்ளது. இதை தவெக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பாஜக-வை எதிா்த்து விஜய் ஏன் பேசவில்லை என அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதேநேரத்தில், பாஜக-வுக்கு எதிராக மக்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளதால் நாங்கள் அங்கு சோ்ந்துள்ளோம்.

மதச்சாா்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்க வேண்டியது தவெக தலைமையின் கடமை என்றாா் அவா்.