திருச்சி அருகே விவசாயி ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போதாவூரைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் மகன் பாண்டியன் (49), விவசாயி.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு போதாவூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அங்கு பைக்கில் வந்த மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினா்.
தகவலறிந்து சென்ற சோமரசம்பேட்டை போலீஸாா் பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


