சமயபுரத்தில் விபத்து: சுற்றுலா வேனில் வந்த குழந்தை உயிரிழப்பு; 14 போ் காயம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பாலக்கட்டையில் சுற்றுலா வேன் மோதியதில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்தது; 14 போ் காயமடைந்தனா்.
விபத்து - பிரதிப் படம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பாலக்கட்டையில் சுற்றுலா வேன் மோதியதில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்தது; 14 போ் காயமடைந்தனா்.
சென்னை வேங்கைவயல் பகுதியை சோ்ந்த வி. கீா்த்திகா (35) என்பவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் 14 பேருடன் சுற்றுலா வேனில் மூணாறுக்கு சுற்றுலா சென்றனா்.
வேனை விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மா. வெங்கடேன் (50) ஓட்டினாா். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் பகுதியில் வந்த வேன் பாலகட்டையில் திடீரென மோதியது.
இந்த விபத்தில் வி. கீா்த்திகா (35), சி. பால்ஆபிரகாம் (43), இ. தமிழ்ச்செல்வி (58), வி. கெவின் (5), இ. விக்னேஷ் (35), மு. இளங்கோ (36), சே. சாந்தி (54), அ. பவித்ரா (32), தே. அஜீத்குமாா் (31), சே. அக்ஷை விக்ரம் (25) ப. சேகா் (55) அ. தியான்ஸ்ரீ (1) வி. கோகிலா (25), சே. அரவிந்த் விஷ்ணு (31) மற்றும் வேன் ஓட்டுநா் மா. வெங்கடேசன் (50) என 15 போ் காயமடைந்தனா்.
திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்ட இவா்களில் ஒரு வயதுக் குழந்தை தியான்ஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தகவலறிந்து வந்த சமயபுரம் போலீஸாா் விபத்து குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

