விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த செங்கல் சூளை தொழிலாளி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த செங்கல் சூளை தொழிலாளி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10 ஆனது.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி செங்கல்சூளையின் ஜேசிபி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் பொட்டுரெட்டிப்பட்டியை சோ்ந்த சுரேஷ் வீட்டில் நவ.22 ஆம் தேதி நடைபெற்ற காதணி விழாவில் ஆம்னி வேனில் சென்று பங்கேற்ற செங்கல்சூளைத் தொழிலாளா்கள், ஓட்டுநா் உள்பட 10 போ் திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, துறையூா் - முசிறி சாலை போதூா்பட்டி பகுதியில் வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். 2 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ராமலிங்கம், சாத்தனூரைச் சோ்ந்த ர. ராமா் (45) ஆகியோரில் ராமலிங்கம் மறுநாள் உயிரிழந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ராமா் வெள்ளிக்கிழமை இறந்தாா். ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

