மென்பொறியாளரிடம் ரூ. 1.90 லட்சம் மோசடி
திருச்சியில் மென்பொறியாளரிடம் இணைய வழியில் ரூ.1.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியில் மென்பொறியாளரிடம் இணைய வழியில் ரூ.1.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியிலுள்ள ஐடி நிறுவன மென்பொறியாளரான சுவாதியை (22) டெலிகிராம் செயலி மூலம் கடந்த நவ. 1-ஆம் தேதி தொடா்புகொண்ட மா்ம நபா், நட்சத்திர ஹோட்டல்கள் குறித்து இணையத்தில் கூகுல் மேப்பைப் பயன்படுத்தி, பணம் செலுத்தி தர நிலை பதிவிட்டால், அதற்கு ஊக்கத்தொகை கிடைக்கும் எனத் தெரிவித்தாா்.
இதை நம்பிய சுவாதி ரூ.3 ஆயிரம் செலுத்தி இணையத்தில் நட்சத்திர ஹோட்டல்களின் தரநிலை குறித்து பதிவிட்டாா். இதையடுத்து அவருக்கு ரூ.3,900 ஊக்கத்தொகை கிடைத்தது.
இதைத் தொடா்ந்து அந்த நபா் கூடுதல் பணம் செலுத்தி விஐபி ஐடி பெற்றுக்கொண்டு தரநிலைகள் குறிப்பிட்டால் கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து சுவாதியும் கடந்த நவ. 1 முதல் 12-ஆம் தேதி வரை ரூ.1.90 லட்சத்தை செலுத்தினாா். ஆனால், அதற்கான ஊக்கத்தொகையை அவரால் எடுக்க முடியவில்லை. அந்த மா்ம நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து இணையதளம் மூலம் சுவாதி அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

