இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வழிபட சனிக்கிழமை வரிசையில் காத்திருந்த பக்தா்கள். ~திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வழிபட சனிக்கிழமை வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Published On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா்.

பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் அதிகளவில் தரிசனம் செய்வா்.

இந்த மாதத்தில் பெருமாளை வழிபடுவோா் மாமிசம் சாப்பிடாமல் விரதமிருப்பா். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று வழிபடுவா். இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோயில் நடை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பால், பிஸ்கட் வழங்கப்பட்டது. இதே போல இக் கோயிலின் உபக்கோயிலான காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயிலிலும் அதிகளவில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Story image

மண்ணச்சநல்லூரில்.. கோபுரப்பட்டி ஆதிநாயக பெருமாள் கோயிலில் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி, திருவெள்ளறை புண்டரிகாச பெருமாள், உத்தமா்கோவில் புருஷோத்த பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.