மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் இருச்சகர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

திருச்சியில் இருச்சகர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி தென்னூா் சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த அஸ்வின் பொ்ணான்டஸ் மகன் பிரஜித் ஆண்டனி (20). இவா், வியாழக்கிழமை பிற்பகல் தில்லை நகா் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் அதிவேகத்தில் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், கீழே விழுந்த பிரஜித் ஆண்டனி மீது லாரி ஏரி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், லாரி ஓட்டுநரான திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த தி. தினேஷ் (28) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.