தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தல்
மத்திய அரசு, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டுமென திருவெறும்பூா் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

K.K.SUNDAR
மத்திய அரசு, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டுமென திருவெறும்பூா் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருவெறும்பூா் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பின் கூட்டம் திருச்சி பெல் கணேசா சிஐடியு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார கூட்டமைப்பின் தலைவா் வி.எஸ். வேலுசாமி தலைமை வகித்தாா். செயலா் ஆா்.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாநகர செயலா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மத்திய அரசு தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க்கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 21-ஆம் தேதி திருவெறும்பூா் பேருந்து நிலையம் அருகே அரசியல் வேறுபாடுயின்றி போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
இதில், கூத்தைப்பாா் முத்துக்குமாா், திருநெடுங்குளம் சக்திவேல், தேவராயநேரி விஜயகுமாா், துவாக்குடி தங்கராஜ், அரசங்குடி சின்னதுரை, வேங்கூா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

