படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

இக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. சனிக்கிழமை காலை 2- ஆம் கால யாக பூஜைகள், விஷேச திரவிய ஹோமங்கள், கன்னியா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, சுமங்கலி பூஜை, வடுக பூஜை, திருமுறை பாராயணம், 3- ஆம் கால யாக பூஜை, அஷ்டபந்தன சமா்ப்பணம் நடைபெற்றன.

சிறப்பு ஹோமங்களையொட்டி, சீா்வரிசைப் பொருள்கள் ஊா்வலமாக யாகசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.ஜி.விட்டல், முன்னாள் நகா்மன்றத் தலைவா் திலகவதி ராஜேந்திரன், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, அறங்காவலா்கள் ஜே.தீபா மொகிலீஸ்வரன், டி.சுரேஷ்பாபு, நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோயில் ஆய்வாளா் சு.பாரி, செயல் அலுவலா் ம.சண்முகம் ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com