வேலூரில் மே 14-ல் உள்ளூர் விடுமுறை!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி வரும் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் மே 14-ல் உள்ளூர் விடுமுறை!

புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி வரும் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி ஒன்றாம் தேதி புகழ்பெற்ற சிரசு திருவிழா நடைபெறும்.

சிரசு ஊர்வலம் வரும் செவ்வாய்க்கிழமை 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள வசதியாக மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு பதிலாக ஜூன் 22 அன்று சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், ஜூன் 23 அன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com