மானிய விலை எல்இடி மின் விளக்கு விற்பனை தொடக்கம் 

விழுப்புரம் மாவட்டத்தில் மின்துறை மூலமாக மானிய விலையில் எல்.இ.டி. மின் விளக்கு விற்பனை செய்யும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டத்தில் மின்துறை மூலமாக மானிய விலையில் எல்.இ.டி. மின் விளக்கு விற்பனை செய்யும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
 மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இந்தியாவில் எரிசக்தியை சேமிக்கும் வகையில் மானிய விலை மின்விளக்கு, மின் விசிறி விற்பனை தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் மின்விசிறி ரூ.1,110-க்கும், டியூப் லைட் ரூ.220-க்கும், எல்.இ.டி. மின் விளக்கு ரூ.70-க்கும் மின்துறை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சுராஜ் கிராம அபியான் திட்டத்தின் கீழ் எல்.இ.டி. மின் விளக்குகள் கிராமங்களைச் சென்றடையும் வகையில், அவற்றை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
 விழுப்புரம் மின் வாரிய அலுவலகம் எதிரே இந்த விற்பனை வாகனங்களின் பயணத்தை மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் காளிமுத்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். செயற்பொறியாளர் மதனகோபால், பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 இந்த விளக்குகளை விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 227 கிராமங்களில் மானிய விலையில் 9 வாட்ஸ் எல்.இ.டி. மின்விளக்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படும். ஆதார் அட்டை நகல், மின் இணைப்பு நகலை கொடுத்து ஒரு நபர் 10 மின் விளக்குகள் வரை வாங்கிக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் வரை அதனை மாற்றிக்கொள்ளும் உத்தரவாதம் வழங்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com