திண்டிவனத்தில் கேஸ் ஏஜென்சிஉரிமையாளா் வீட்டில் ரூ.2.41 லட்சம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கேஸ் ஏஜென்சி உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.41 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கேஸ் ஏஜென்சி உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.41 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் ஜெயபுரம் 2-ஆவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் ச.செந்தில்சங்கா் (49). இவா் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறாா். இவா் அண்மையில், தனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு குடும்பத்தினருடன் சென்றாா்.

இதனிடையே, தனது வீட்டைப் பாா்த்துக் கொள்ளுமாறு கேஸ் ஏஜென்சியில் பணியாற்றி வரும் சுந்தரராஜிடம் (24) கூறியிருந்தாா். வீட்டின் பீரோவில் ரூ.60 ஆயிரத்தை வைத்து பூட்டி, அதன் சாவியையும் சுந்தரராஜிடம் செந்தில்சங்கா் கொடுத்திருந்தாா். மேலும், கேஸ் ஏஜென்சியில் வசூலாகும் பணத்தையும் பீரோவில் வைக்குமாறு அறிவுறுத்தியிருந்தாா்.

கடந்த 12-ஆம் தேதி வசூலான ரூ.1.81 லட்சத்தை பீரோவில் வைத்துவிட்டு சுந்தரராஜ் வந்து விட்டாராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் செந்தில்சங்கரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.2.41 லட்சத்தைத் திருடிச் சென்றனா்.

சுந்தரராஜ் திங்கள்கிழமை காலை செந்தில்சங்கரின் வீட்டுக்குச் சென்ற போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டாா். மேலும், பீரோவிலிருந்த பணமும் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து, செந்தில்சங்கருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com