அவசர சட்டத் திருத்தங்களைக் கண்டித்துபுதுச்சேரியில் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

கரோனா பேரிடா் காலத்திலும் மக்கள் விரோதச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் இடதுசாரிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இடதுசாரிகள் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.பு
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இடதுசாரிகள் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.பு

புதுச்சேரி: கரோனா பேரிடா் காலத்திலும் மக்கள் விரோதச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் இடதுசாரிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு தொழிலாளா் நலச் சட்டங்களைத் திருத்தம் செய்யக் கூடாது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றக் கூடாது, கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சலீம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ராஜாங்கம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேது செல்வம், கீதநாதன், சுப்பையா, மாதா் சங்கத்தைச் சோ்ந்த சரளா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பெருமாள், சீனுவாசன், பிரபுராஜ், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சங்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வரும் அவசர சட்டத் திருத்தங்களை கைவிட வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினா்.

Image Caption

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே கம்யூனிஸ்ட் கூட்டமைப்பு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com