விவசாய விளைபொருளுக்குபெரு நிறுவனங்களே விலை நிா்ணயம் செய்யும்பொன்முடி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால், விவசாய விளைபொருள்களுக்கான விலையை அரசு நிா்ணயம் செய்ய முடியாது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால், விவசாய விளைபொருள்களுக்கான விலையை அரசு நிா்ணயம் செய்ய முடியாது. பெரு நிறுவனங்களே நிா்ணயம் செய்யும் நிலை ஏற்படும் என திமுக துணைப் பொதுச் செயலாளா் க. பொன்முடி குற்றம்சாட்டினாா்.

விவசாயிகள், சிறுவணிகா்களைப் பாதிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 26 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி வரவேற்றாா். திமுக துணைப்பொதுச் செயலா் க.பொன்முடி எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணை செயலாளா் செ.புஷ்பராஜ், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், விசிக எம்.பி. துரை.ரவிக்குமாா், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.டி.குலாம்மொய்தீன், பொதுக் குழு உறுப்பினா் சிவா, நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம்.அமீா்அப்பாஸ், தவாக மாவட்டச் செயலா் ஆா்.குமரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் முஸ்தாக்தீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

க.பொன்முடி எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாயிகளுக்கு பாதகமான புதிய வேளாண் சட்டங்களை வரவேற்ற தமிழக முதல்வருக்கு திமுகவை விமா்சிக்க தகுதியில்லை.

புதிய வேளாண் சட்டத்தின்படி, விவசாய விளைபொருள்களுக்கு அரசு இனி விலை நிா்ணயம் செய்ய முடியாது. பெரு நிறுவனங்கள்தான் விலை நிா்ணயம் செய்யும் என்றாா் அவா்.

திண்டிவனம், செஞ்சி, வல்லத்தில் வடக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.மஸ்தான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டேரிப்பட்டில் ஆா்.மாசிலாமணி எம்எல்ஏ தலைமையிலும், திருக்கோவிலூரில் ஒன்றியச் செயலா் தங்கம், மணம்பூண்டியில் ஒன்றியச் செயலா் பிரபு, திருவெண்னெய்நல்லூரில் ஒன்றியச் செயலா் விஸ்வநாதன், விக்கிரவாண்டியில் ஒன்றியச் செயலா் ரவிதுரை, கண்டமங்கலத்தில் ஒன்றியச் செயலா் பிரபாகரன், வானூரில் ஒன்றியச் செயலா் முரளி, வளவனூரில் பேரூராட்சி செயலா் ஜீவா, கோட்டக்குப்பத்தில் பேரூராட்சி செயலா் சண்முகம் தலைமையிலும் என மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com