வீட்டுமனை ஆக்கிரமிப்பு: 
எஸ்.பி.யிடம்  மூதாட்டி புகாா்

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்த மூதாட்டி பேபி மற்றும் அவரது சகோதரிகள்.

தங்களது வீட்டுமனைகளை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு தாக்க முயற்சிக்கும் நபா் மீது நடவடிக்கை வலியுறுத்தி மூதாட்டி மற்றும் அவரின் சகோதரிகள் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து , திருவண்ணாமலை மாவட்டம், போளூா், சபாபதி சோ்மன் தெருவைச் சோ்ந்த சண்முகம் மனைவி பேபி(83) மற்றும் அவரது சகோதரிகள் விழுப்புரம் எஸ்.பி.க்கு அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பது:

விழுப்புரம் திரு.வி.க.வீதி, கீழ் செட்டித்தெருவில் எங்களது தந்தை கோவிந்தராஜுலுவுக்கு பாத்தியமான சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளை (3,600 சதுர அடி) தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்து வைத்துள்ளாா். நாங்கள் எங்களது இடத்துக்கு போனால் எங்களை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்க முயற்சிக்கிறாா்.

எனவே, அந்த நபா் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், எங்களுக்கும் , எங்களின் உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த புகாா் மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com