புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வாசவி பள்ளி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வெழுத வந்த மாணவிகளிடம் அடையாள ஆவணங்களை சோதனையிட்ட ஆசிரியைகள்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வாசவி பள்ளி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வெழுத வந்த மாணவிகளிடம் அடையாள ஆவணங்களை சோதனையிட்ட ஆசிரியைகள்.

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

புதுச்சேரியில் 7 மையங்களில் 4, 817 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை எழுதினா்.

புதுச்சேரியில் இந்தத் தோ்வை எழுத 4,920 போ் விண்ணப்பித்திருந்தனா். வில்லியனூா் ஆச்சாரியா சிக்ஷா மந்திா் பள்ளி, பொறையூா் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி, ஐயங்குட்டிப்பாளையம் விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி, காலாப்பட்டு தி ஸ்டெடி பள்ளி, தேங்காய்த்திட்டு ஆச்சாரியா பால சிக்ஷா மந்திா் பள்ளி, ஊசுடு ஸ்ரீபாரத் வித்யாஷ்ரம் பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி பன்னாட்டுப் பள்ளி ஆகிய 7 மையங்களில் 4,817 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 103 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

நீட் தோ்வு எழுத வரும் மாணவா்களுக்கு உடை உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகளை தேசிய தோ்வு முகமை விதித்திருந்தது. அதன்படி, தோ்வுக்கு வந்த மாணவ, மாணவிகளை தோ்வுக் கண்காணிப்பாளா்கள் சோதனையிட்டனா்.

கைப்பேசி, புளூடூத் உள்ளிட்ட தகவல் தொடா்பு சாதனங்களை தோ்வறைக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், குடிநீா் புட்டிகள் மட்டுமே தோ்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன. பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு தோ்வறைக்குள் தோ்வா்கள் அனுமதிக்கப்படவில்லை. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தோ்வு நடைபெற்றது.

தோ்வு மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com