மொழிபெயர்ப்புகளால்தான் மொழி சிறப்படைகிறது : அவ்வை நடராஜன்

எந்த மொழி அதிகளவில் மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியே சிறப்பான வளர்ச்சியை அடைகிறது என

எந்த மொழி அதிகளவில் மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியே சிறப்பான வளர்ச்சியை அடைகிறது என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தெரிவித்தார்.

கடலூரில் "நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகள்' வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:  உலகிலேயே மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படும் பிட்ஜெரால்டின் சில மொழிபெயர்ப்புகள் அதிகம் பிழையுள்ளவை என தெரியவந்துள்ளது.  எனவே மொழிபெயர்ப்பாளர்கள், மூலநூலில் உள்ள வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொண்டு மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டால், சிறந்த மொழிபெயர்ப்பாளராக உருவாக முடியும்.  மொழிபெயர்ப்புகள் வளரும் போதுதான், ஓர் மொழி சிறப்படைகிறது.

இந்தியாவின் ஒற்றுமையையும், பெருமையையும் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பவை மொழிபெயர்ப்பு நூல்கள்.  வட மாநிலங்களில் உள்ள முக்கிய எழுத்தாளர்கள், தமிழகத்தில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை அறிந்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் உள்ள முக்கிய எழுத்தாளர்களை, வட மாநில இலக்கிய ஆர்வலர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், தமிழ் மொழி படைப்புகள் வட மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது அதிகரிக்க வேண்டும்.

பிற மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள், நூல்கள் வந்து சில மாதங்களிலேயே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகின்றன. ஆனால் இதே நூல்கள், தமிழ் மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகே மொழிபெயர்க்கப்படுகின்றன. ÷இந்தியாவில் உள்ள வேறு மொழி நூல்கள் கூட ஆங்கிலம் வாயிலாகவே தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள், சிறப்பு வாய்ந்ததாக இருக்க முடியாது.

மொழிபெயர்ப்பு என்பது மிக அரிய கலை ஆகும். தமிழகத்தில் இந்த கலை வளர, புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வர வேண்டும்.

மாணவர்களிடையே மொழிபெயர்ப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் போது புதிய மொழிபெயர்ப்பாளர்ளை அதிகளவில் உருவாக்க முடியும் என்றார் அவர்.

விருதுகள்: ÷விழாவில் டாக்டர் கா.செல்லப்பனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.÷சுசிலா, போப்பு புருஷோத்தமன், மா.கோவிந்தராஜன், ந.சுப்பிரமணியன், ந.மனோகரன், வைதேகி ஹெர்பர்ட் ஆகியோருக்கு மொழியாக்க விருதுகள் வழங்கப்பட்டன.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்' சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சென்னையைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி வி.சைதன்யாவுக்கு சிறப்பு பரிசு மற்றும் மொழியாக்க விருது வழங்கப்பட்டன.

பள்ளி-கல்லூரி அளவில்...

÷மொழிபெயர்ப்புப் போட்டியில் பள்ளி அளவில் என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி முதல் பரிசையும், கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவர் சரத் இரண்டாம் பரிசையும், கிருஷ்ணசாமி பள்ளி மாணவர் பிரசன்னா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

கல்லூரிகள் அளவில் புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் முதுகலைப் பட்டமேற்படிப்பு மைய மாணவிகள் அன்புமலர் முதல் பரிசையும், ரேவதி இரண்டாம் பரிசையும், நிலாதேவி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

இந்த மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கி.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினார்.

டாக்டர் ஆர்.நடராஜன் எழுதிய "சிமென்ட் அன்-சிமென்ட்ஸ்' மற்றும் "திசை எட்டும்' ஆசிரியர் குறிஞ்சிவேலன் எழுதிய "அடையாளங்கள்' ஆகிய நூல்கள் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏ.நடராஜன், ரா.நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மொழிபெயர்ப்பாளர்கள் சார்பாக மாணவி வி.சைதன்யா ஏற்புரையாற்றினார்.

விழா நிகழ்வுகளை பால்கி தொகுத்து வழங்கினார். ச.சிவராமன் நன்றிக் கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com