மனதை மென்மையாக்குவது இலக்கியம்: எழுத்தாளர் பாவண்ணன்

இலக்கியம் மனிதரின் மனதை மென்மையாக்குகிறது என்றார் எழுத்தாளர் பாவண்ணன்

இலக்கியம் மனிதரின் மனதை மென்மையாக்குகிறது என்றார் எழுத்தாளர் பாவண்ணன்.
நற்றிணை இலக்கியக் கூடல் அமைப்பின் 3- ஆம் ஆண்டு தொடக்க விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாவண்ணனின் காலத்தின் விளம்பில் என்ற சிறுகதையின் வாசிப்பும், கலந்துரையாடலும் நடைபெற்றது. தொடர்ந்து அவரது படைப்புகள் குறித்து வாசகர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
பின்னர் அவர், 'இலக்கியத்தின் பாதை' என்ற தலைப்பில் பேசியதாவது: உலக இலக்கியம் என்பது அடர்ந்த காடு. அதில் ஒவ்வொருவரும் தனிப் பாதையை தனது ஆத்மாவிலிருந்து எடுத்து அமைத்துக்கொண்டு அதன் வழியாகச் செல்லலாம். மற்றவர்களின் பாதையை பயன்படுத்தலாம், ஆனால் தடம் பதிக்க முடியாது.
இலக்கியம் மனிதரின் மனதை மென்மையாக்குகிறது. தமிழ் இலக்கியம் சங்க கால இலக்கியத்திலிருந்தே தொடங்குகிறது. சங்க காலப் பாடல்களே நவீன இலக்கியத்தின் வழிகாட்டியாக உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் இலக்கியச் சோலை அமைப்பு வளவ.துரையன், மன்றவாணன், பாஸ்கரன், எழுத்தாளர் தில்லையாடி ராஜா, தமுஎக சங்கம் கவிஞர் பால்கி, இலக்கிய விமர்சகர் கடலூர் சீனு, பாரதிதாசன் மன்றம் கடல் நாகராசன், முன்னாள் பேராசிரியர் அர்த்தநாரி, ஆம்பல் இலக்கியக் கூடல் கனிமொழி, வெற்றி செல்வி, நசீர், இதயதுல்லா, ஓவியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நற்றிணை இலக்கியக் கூடல் நிர்வாகி ப.வேல்முருகன் நிகழ்ச்சியை
ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com