நெல் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

பண்ருட்டி வட்டாரம், சிறுவத்தூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

பண்ருட்டி வட்டாரம், சிறுவத்தூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மோகன்ராஜ் தலைமை வகித்தார். விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.கண்ணன், விதைப் பண்ணை அமைத்தல் தொடங்கி, விதை அறுவடை வரையிலான நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். உதவிப் பேராசிரியர் கே.நடராஜன், நெல்பயிர் பாதுகாப்பு, நன்மை, தீமை செய்யும் பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் எஸ்.வீராசாமி, ஆர்.ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com