ஆட்டிசத்துக்கு சிகிச்சையளிக்க பயிற்சி மையம் தொடங்கலாம்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயிற்சி மையம் தொடங்க தனியார்கள் முன்வர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கேட்டுக் கொண்டார்.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயிற்சி மையம் தொடங்க தனியார்கள் முன்வர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கேட்டுக் கொண்டார்.
 இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் கொடங்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2018-19 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சரால் இது சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.
 எனவே, இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஜூலை 14 -ஆம் தேதிக்குள் "மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல தரைதளம், கடலூர்' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com