என்.எல்.சி. தொழிலாளர்கள் வழக்கில் இருந்து விடுதலை

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், கடந்த 2015- ஆம் ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், கடந்த 2015- ஆம் ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும், பொறியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, பொறியாளர்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 
இதையடுத்து, நெய்வேலி நகரியம் காவல் நிலையத்தில் பொறியாளர் அண்ணாதுரை புகார் அளித்தார். அதன் பேரில், என்.எல்.சி. ஊழியர்களான பழனிவேல், ராஜேந்திரன், முருகேசன், சுப்பிரமணியன், பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, புண்ணியமூர்த்தி, கோபால், வெங்கடேசன், கிருஷ்ணன், மலர்க்கண்ணன் ஆகிய 11 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தகுந்த சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லை எனக் கூறி வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com