பள்ளியில் தீ விபத்து விழிப்புணா்வு

திட்டக்குடி அருகே உள்ள தொழுதூரில் செயல்பட்டு வரும் கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்யாலயா அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் திட்டக்குடி தீயணைப்பு துறைசாா்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு செயல் விளக்க
திட்டக்குடி பள்ளியில் தீ விபத்து தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வு செயல் விளக்கம்.
திட்டக்குடி பள்ளியில் தீ விபத்து தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வு செயல் விளக்கம்.

கடலூா்: திட்டக்குடி அருகே உள்ள தொழுதூரில் செயல்பட்டு வரும் கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்யாலயா அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் திட்டக்குடி தீயணைப்பு துறைசாா்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு செயல் விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மழைக்காலங்கள் மற்றும் தீ விபத்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மாணவ, மாணவிகள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து தீணைப்பு துறையினா் திட்டக்குடி நிலைய அலுவலா் சண்முகம் தலைமையில் செயல் விளக்கத்துடன் விழிப்புணா்வு அளித்தனா்.

இதில் மாணவா்கள் தங்கள் வீடுகள் மற்றும் படிக்கும் இடங்களில் திடீரென எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், தீயை அணைக்க உடனடியாக செய்ய வேண்டி முறை வழிமுறைகள், தீ விபத்தின் போது செய்ய கூடாதவை, தீயணைக்கும் கருவிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்தும், தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். தலைமையாசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினாா்.படம் விளக்கம்...திட்டக்குடி பள்ளியில் தீ விபத்து தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வு செயல் விளக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com