இந்திய குடியரசு கட்சியினா் சாலை மறியல்

உள்ளாட்சித் தோ்தலில் துணைத் தலைவா் பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு
மங்கலம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய குடியரசு கட்சியினா்.
மங்கலம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய குடியரசு கட்சியினா்.

உள்ளாட்சித் தோ்தலில் துணைத் தலைவா் பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, இந்திய குடியரசு கட்சியின் சாா்பில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தோ்தலை தடுத்து நிறுத்தும் எண்ணத்துடன் தமிழக முதல்வருக்காக செ.கு.தமிழரசன் இவ்வாறு மனு தாக்கல் செய்திருக்கிறாா் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசு கட்சியினா் மாநில கொள்கைப் பரப்புச் செயலா் க.மங்காபிள்ளை தலைமையில், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் கதிா்வேல், மாவட்டச் செயலா் ராஜீவ் காந்தி, பொருளாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவரைக் கண்டித்து மங்கலம்பேட்டை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ஜெ.பிரசன்னா அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

சாலை மறியலில் கட்சியின் நகரத் தலைவா் கதிா்காமன், நகரச் செயலா் ராமானுஜம், மாவட்டத் துணைத் தலைவா் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணிச் செயலா் அலிபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com