தேர்வில் விதிமீறல்:  25 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தேர்வில் விதிமீறலில் ஈடுபட்டதாக 25 ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தேர்வில் விதிமீறலில் ஈடுபட்டதாக 25 ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 213 பள்ளிகளில் தேர்வு மையங்கள் செயல்பட்டன. தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், தேர்வுக் கூட அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வுகள் முடிவடைந்த நிலையில், 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பிடிபட்டனர்.
மேலும், சில தனியார் பள்ளிகளில் தேர்வுக் கூட அறை கண்காணிப்பாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் தேவையற்ற நேரங்களில் தேநீர் வாங்கிக் கொடுப்பது, பள்ளி நிர்வாகத்துக்கு உள்பட்ட பணியாளர்களைத் தேர்வு அறைக்குள் அனுமதித்தது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மாவட்டம் முழுவதும் 7 பள்ளிகளில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதை மாவட்ட தேர்வுகள் பொறுப்பு அலுவலர் கண்டறிந்தார்.
இதையடுத்து, 7 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 3 துறை அலுவலர்கள், 15 அறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறியதாவது: மாவட்டம் முழுவதும் 25 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில், சிலர் விளக்கம் அளித்தனர். அதனடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்படுத்தப்படுவர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com