பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இந்தச் சங்கத்தின் பண்ருட்டி வட்டக் கிளையின் 3-ஆவது மாநாடு, பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது. வட்டத் தலைவர் வேணு.ஜெயராமன் தலைமை வகித்தார். வேணு.பத்ரிநாராயணன், வி.ரங்கநாதன், ஜி.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலர் என்.காசிநாதன் தொடக்க உரை நிகழ்த்தினார். வட்டச் செயலர் ஆர்.ஞானமணி வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் வி.கலியமூர்த்தி வரவு-செலவு அறிக்கை வாசித்தார். 
பண்ருட்டி உதவி கருவூல அலுவலர் பி.பாபு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் ப.சீனிவாசன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சி.ராமநாதன், துணைத் தலைவர் சி.குழந்தைவேலு, சிதம்பரம் வட்டச் செயலர் கே.என்.பன்னீர்செல்வம், மாவட்ட இணைச் செயலர் எஸ்.கருணாகரன், கே.செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர் ஜி.பழனி, செயலர் ஆர்.மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலச் செயலர் டி.புருஷோத்தமன் நிறைவுரையாற்றினார்.
 மாநாட்டில், புதிய ஓய்வூதியத் திட்டதை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 
1.1.2019 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி மற்றும் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர். துணைத் தலைவர் டி.தங்கவேல் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com