சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுவை ஆளுநர் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 21st April 2019 12:54 AM | Last Updated : 21st April 2019 12:54 AM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆளுநர் கிரண் பேடி கனக சபை மீது ஏற்றி சித் சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். பட்டு தீட்சிதர் உள்ளிட்ட பொது தீட்சிதர்கள், நடராஜப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனை செய்து கிரண் பேடியிடம் பிரசாதம் வழங்கினர். பின்னர் கிரண் பேடி தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.