என்எல்சி சார்பில் 8 இடங்களில் நீர்மோர் பந்தல்

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் 8 இடங்களில் நீர்மோர் பந்தலை திறந்துள்ளது. 

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் 8 இடங்களில் நீர்மோர் பந்தலை திறந்துள்ளது. 
 என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், "ஜல்தாரா' என்ற  திட்டம் மூலம் நகரியத்தின் 8 முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தலை 2015-ஆம் ஆண்டு முதல் அமைத்து வருகிறது. அதன்படி, நிகழாண்டு, 60 நாள்களுக்கு தினமும் 35 ஆயிரம் நபர்களுக்கு நீர்மோர், எலுமிச்சை பழச்சாறு,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளது. இதற்காக ரூ.42 லட்சத்தை என்எல்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில்என்எல்சி மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் 
ஆர்.மோகன் முன்னிலை வகித்தார்.  இதுபோல, நெய்வேலி நுழைவு வாயிலில் என்எல்சி மனித வளத் துறை தலைமைப் பொதுமேலாளர் என்.சங்கர், சி.தியாகராஜூ, நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் நிதித் துறை தலைமைப் பொதுமேலாளர் எஸ்.மதிவாணன், சுரங்கங்களுக்கான மனித வளத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஜோ.ஸ்டீபன் தோமினிக், நெய்வேலி புனித பால் பள்ளியில் கண்காணிப்புத் துறை தலைமைப் பொதுமேலாளர் எம்.ராகவன், சுரங்கம்-1ஏ பொதுமேலாளர் கே.முகுந்தன், என்எல்சி இந்தியா மருத்துவமனையில் நகர நிர்வாகத் துறை தலைமைப் பொதுமேலாளர் எஸ்.ஆர்.சேகர், என்எல்சி இந்தியா மருத்துவமனை தலைமைப் பொது கண்காணிப்பாளர் முனீந்திர குமார்ஜா, வட்டம்-29, சூப்பர் பஜாரில் பொருள் மேலாண்மைத் துறை பொதுமேலாளர் எஸ்.நாகராஜன், மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் - புதுக்குப்பம் சந்திப்பில் ஒப்பந்தத் துறை தலைமைப் பொதுமேலாளர் வி.சண்முகநாதன், முதல் சுரங்க பொதுமேலாளர் எ.ராஜசேகர ரெட்டி, மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் தலைமைப் பொதுமேலாளர் எ.ரவீந்திரன், இரண்டாம் சுரங்க தலைமைப் பொது மேலாளர் ஜகதீஷ் சந்திர மஜும்தார் ஆகியோர் நீர்மோர் பந்தலை தொடக்கி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com