ஆக்கிரமிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நிலங்களை மீட்கக் கோரி விசிக மனு

ஆக்கிரமிப்புக்குள்ளான ஆதிதிராவிடர் நிலங்களை மீட்க வேண்டும் என்று  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது. 

ஆக்கிரமிப்புக்குள்ளான ஆதிதிராவிடர் நிலங்களை மீட்க வேண்டும் என்று  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது. 
 இதுகுறித்து அந்தக் கட்சியின் மண்டலச் செயலர் சு.திருமாறன், மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன் ஆகியோர் அளித்த மனு: புவனகிரி வட்டம், வேளங்கிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சுமார் 80 ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த 1965-ஆம் ஆண்டு 9 ஏக்கர் நிலம் அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் முந்திரி, சவுக்கு, தைல மரங்கள் பயிரிட்டு அனுபவித்து வந்த நிலையில், அவர்களை அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை கூறியும் அதிலுள்ள மணலை சிலர் கடத்தி வருகின்றனர். இதனால், இந்தப் பகுதியில் பாசன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதன்மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும், அதே வட்டத்துக்குள்பட்ட கொத்தட்டை கிராமத்தில் 13 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு கடந்த 1983-ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக, நிலம் வழங்கியவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், நிலம் வழங்கியவர்களே தற்போது அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் அதை ஆதிதிராவிடர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அவர்களே பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com