கடலூரில் வேளாண் கண்காட்சி நாளை தொடக்கம்

கடலூரில் "தினமணி' சார்பில் வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஆக. 16) தொடங்குகிறது.

கடலூரில் "தினமணி' சார்பில் வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஆக. 16) தொடங்குகிறது.
வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்களையும், நவீன தொழில்நுட்பங்களையும், தற்போதைய வேளாண் சூழலையும் விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் "தினமணி' நாளிதழ் சார்பில், இரண்டாம் ஆண்டாக கடலூர் நகர அரங்கில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடக்கிவைக்கிறார். "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை உரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன், தி சுசான்லி குழுமத் தலைவர் சி.எ.ரவி, என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் (மனித வளம்) ஆர்.விக்ரமன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் சாந்தா கோவிந்த், பர்ஸ்ட் வேர்ல்ட் கம்யூனிட்டி நிறுவனத் தலைவர் சி.கே.அசோக்குமார், கோவன்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பி.கலைக்கோவன், வடலூர் ஓபிஆர் நினைவு கல்வி நிறுவனங்களின் செயலர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
தொடர்ந்து பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் கருத்தரங்கில், "தற்போதைய காலநிலை மாற்றம்' குறித்து வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணனும், 'விவசாயிகள் வாழ்வாதாரம், பயிர்க் காப்பீடு' குறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலர் பெ.ரவீந்திரனும், "வாழை சாகுபடி' குறித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் சிவ.சரவணனும் பேசுகின்றனர்.
கருத்தரங்கு: 2- ஆவது நாளாக சனிக்கிழமை (ஆக.17) நடைபெறும் கண்காட்சியில் முற்பகல் 11 மணிக்கு கருத்தரங்கு தொடங்குகிறது. "மூலிகை தொழிலதிபர் ஆகலாம்' என்ற தலைப்பில் தி சுசான்லி குழுமத்தின் தலைவர் சி.எ.ரவி பேசுகிறார். தொடர்ந்து, "மூலிகைகளுக்கான மானிய விவரங்கள்' என்ற தலைப்பில் புதுவை ஸ்டேட் மெடிசினல் பிளான்டஸ் போர்ட் நோடல் அதிகாரி ஸ்ரீதரனும், "இன்றைய விவசாயமும், நீர் மேலாண்மையும்' என்ற தலைப்பில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரனும், "தமிழக ஏரிகள் மற்றும் வேளாண் பாசனம்' குறித்து தமிழ்நாடு பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைத் தலைவர் கே.வி.கண்ணன் பிள்ளையும், "ஒருங்கிணைந்த பண்ணையம்' என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி இயக்குநர் ஆர்.எம்.கதிரேசனும் பேசுகின்றனர்.
கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு விதைகள், மரக் கன்றுகளை இலவசமாக வழங்கப்படும். மேலும், கண்காட்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், விவசாயிகளுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com