மார்க்சிஸ்ட் கம்யூ. வரலாற்று கண்காட்சி

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட  வரலாற்று கண்காட்சி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட  வரலாற்று கண்காட்சி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 இந்தக் கட்சி சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு, கலை இரவு, கட்சியின் கடலூர் மாவட்ட வரலாற்று நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் சனிக்கிழமை மாலையில் நடைபெறுகிறது. இந்த விழாவில், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ்
காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். 
 இதை முன்னிட்டு, கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் தொடர்பான வரலாற்றுக் கண்காட்சி திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. விழாவுக்கு கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் பொதுச் செயலர் மு.மருதவாணன் தலைமை வகித்தார். கட்சியின் நகரச் செயலர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலர் ஜே.ராஜேஷ்கண்ணன், சிப்காட் செயலர் எம்.சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரம்பியல் மருத்துவர் க.ரேணுகாதேவி கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். 
 நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.தட்சணாமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், டி.பழனிவேல், எஸ்.முத்துகுமரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர்குழு உறுப்பினர் டி.செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com