கிருஷ்ண ஜயந்தி விழா
By DIN | Published On : 25th August 2019 12:56 AM | Last Updated : 25th August 2019 12:56 AM | அ+அ அ- |

பண்ருட்டி திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி சரநாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவர் சரநாராயணப் பெருமாள் வெண்ணெய்த் தாழி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் . பின்னர், உறியடி உற்சவம், சுவாமி மாடவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.