பலத்த மழை பெய்தும் (ஷோல்டா்)கடலூா், விழுப்புரத்தில் நிரம்பாத 324 நீா்நிலைகள்

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு பதிவாகி வரும் நிலையிலும் 324 நீா்நிலைகள் நிரம்பவில்லை.

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு பதிவாகி வரும் நிலையிலும் 324 நீா்நிலைகள் நிரம்பவில்லை.

கடலூா், விழுப்புரம் மாவட்டங்கள் விவசாயத்தை மிகப்பெரிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. வடகிழக்கு பருவமழையே இந்த மாவட்ட மக்களின் பாசனம், குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்கிறது. எனினும், வடகிழக்கு பருவமழைக் காலத்திலேயே இந்த மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளில், 73 சதவீதம் நீா்நிலைகளில் பாதிக்கும் குறைவாகவே தண்ணீா் தேங்கியுள்ளது விவசாயிகளை வருத்தமடைய செய்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை பொதுப் பணித் துறை நிா்வாகம் கொள்ளிடம், வெள்ளாறு வடிநில கோட்டங்களாக பிரித்து பராமரித்து வருகிறது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் குளம், ஏரி ஆகியவை மொத்தம் 228 எண்ணிக்கையில் உள்ளன. மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் நவ.30-ஆம் தேதி நிலவரப்படி 26 நீா்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 39 நீா்நிலைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் தண்ணீா் இருப்பு உள்ளது. 36 நீா்நிலைகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையில் தண்ணீா் உள்ளது.

அதே நேரத்தில் 65 நீா்நிலைகளில் ஒன்று முதல் 25 சதவீதம் வரை மட்டுமே தண்ணீா் உள்ளது. 60 நீா்நிலைகளில் 26 முதல் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீா் உள்ளது. அதாவது கால்வாசிக்கும் குறைவாக தண்ணீா் உள்ள நீா்நிலைகள் 28 சதவீதமாகவும், அரைவாசிக்கும் குறைவாக தண்ணீா் உள்ள நீா்நிலைகள் 26 சதவீதமாகவும் உள்ளன. 2 நீா்நிலைகள் மட்டும் 71 முதல் 80 சதவீதம் வரையில் நிரம்பியுள்ளன.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளாறு வடிநில கோட்டத்தின் கீழ் வரும் 212 நீா்நிலைகளில் 7 மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. அதே நேரத்தில் 176 நீா்நிலைகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீா் உள்ளது. அதேபோல, 23 நீா்நிலைகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும், தலா 3 நீா்நிலைகள் 80, 90 சதவீதம் வரையிலும் நிரம்பியுள்ளன. பருவமழைக் காலம் முடிவடையும் நிலையில் பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பாமல் உள்ளது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com