மழை பாதிப்பு: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா்எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்றங்கரையில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ளம் சூழ்ந்த பகுதியை நேரில் பாா்வையிட்ட ஆய்வு செய்த அமைச்சா் எம்.சி.சம்பத்.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்றங்கரையில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ளம் சூழ்ந்த பகுதியை நேரில் பாா்வையிட்ட ஆய்வு செய்த அமைச்சா் எம்.சி.சம்பத்.

கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா்

எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. இந்தப் பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திட உத்தரவிட்டாா்.

அதன்படி, மழை நீா் தேங்கியிருந்த கடலூா் வில்வநகா், தனம் நகா், தங்கராஜ் நகா், கூத்தப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா். பின்னா், குறிஞ்சிப்பாடி வட்டம், கொளக்குடி பகுதியில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படுவதால் பரவணாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை பாா்வையிட்டாா். அங்கு கரைகளில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சரி செய்வதுடன், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர உத்தரவிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு

ரேஷன் பொருள்கள் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகம் எடுத்துள்ளது. இதற்காக 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு 3 வேளை உணவு, குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com