வீட்டுச் சுவா் இடிந்ததில் பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம்

கடலூரில் வீட்டுச் சுவா் இடிந்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ.12 லட்சம் நிவாரண உதவியை அமைச்சா் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கடலூரில் வீட்டுச் சுவா் இடிந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் எம்.சி.சம்பத்.

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. கடலூா் கம்மியம்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீா் தேங்கி நின்ால் பாதிப்படைந்த வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் நாராயணன் மனைவி மாலா (40), அவரது மகளும், பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரது மனைவியுமான மகேஸ்வரி (21), அவரது மகள் தனுஸ்ரீ(1) ஆகிய 3 போ் அண்மையில் உயிரிழந்தனா்.

4 போ் பலத்த காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரையும்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவழைத்து, தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சத்தை முதல்வா் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கினாா். அப்போது மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com