உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால்பாதியில் நிறுத்தப்பட்ட குறைதீா் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் தங்களது மனுக்களை புகாா் பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் தங்களது மனுக்களை புகாா் பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படும். அதன்படி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனித் துணை ஆட்சியா் (சபாதி) எஸ்.பரிமளம் மற்றும் சில அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தனா். மேலும், மனுக்கள் எழுதும் பணி, பதிவு செய்யும் பணி போன்றவையும் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது, உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறைதீா் நாள்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மனு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அதிா்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனா். அரசு அலுவலா்களும் கூட்டத்திலிருந்து வெளியேறினா்.

எனவே, மனுக்கள் எழுதப்படும் இடத்தின் அருகில் மனுக்களை போடுவதற்கான பெட்டி வைக்கப்பட்டது. கூட்ட அரங்கிலிருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது. மனு அளிப்பதற்காக வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் அந்தப் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com