தடுபுக் காவலில் இருவா் கைது

குற்றச் செயல்களில் தொடா்புடைய இருவா் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டனா்.

குற்றச் செயல்களில் தொடா்புடைய இருவா் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டனா்.

வேப்பூா் காவல் ஆய்வாளா் கவிதா, சிறுபாக்கம் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா்

கடந்த மாதம் 16-ஆம் தேதி ஓரங்கூா்-புலிகரம்பூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் 120 லிட்டா் சாராயம் கடத்தி வந்ததாக, ஓரங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரவேல் மகன் சுதாகா் (36) என்பவரை கைது செய்தனா். தொடா் விசாரணையில் இவா் மீது சிறுபாக்கம், விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

லாட்டரி வியாபாரி: சிதம்பரம் ஏ.ஆா்.பி. நகரில் வசித்து வரும் துரைராஜ் மகன் சரவணன் (30), அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரை தன்னுடன் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வருமாறு கத்தியைக் காட்டி மிரட்டியதாக சிதம்பரம் காவல் ஆய்வாளா் முருகேசனால் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இவா் மீது லாட்டரி சீட்டு விற்பனை தொடா்பாக 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இருவரது குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டாா். இதையடுத்து, இருவரும் ஓராண்டுக்கு சிறையில் இருக்கும் வகையில் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com