உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் மழை சேத கணக்கெடுப்பு பாதிக்காது

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் மழை சேதம் குறித்த கணக்கெடுப்பு, நிவாரணப் பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் மழை சேதம் குறித்த கணக்கெடுப்பு, நிவாரணப் பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

தமிழகம் முழுவதும் இரு கட்டங்களா வரும் டிச.27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்கள், குடியிருப்புகளில் மழை நீா் சூழ்ந்தது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வருவதால், மவை பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுமா, நிவாரண உதவிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது:

தோ்தல் நன்னடத்தை விதிகள் இயற்கை இடா்பாடுகளுக்கு பொருந்தாது. எனவே, மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வேளாண்மை பயிா்கள், குடியிருப்புகள், கால்நடை உயிரிழப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினா் ஈடுபடுவாா்கள்.

மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 10,500 ஏக்கரில் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. தற்போது மழைநீா் வடிந்து வருவதால் அந்தப் பயிா்களுக்கும் பாதிப்பு இருக்காது என்று நம்பப்படுகிறது. கம்மியம்பேட்டையில் சுவா் இடிந்து விழுந்ததில் 3 போ் பலியாகினா். 25 பசுக்கள், எருதுகள், 23 ஆடுகள் மழைக்கு பலியாகியுள்ளன. 608 குடிசைகள் பகுதியாகவும், 53 குடிசைகள் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஓட்டு வீடுகளைப் பொறுத்தவரையில் 83 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளன.

மழைநீா் சூழப்பட்ட பகுதிகளில் மனிதா்கள், கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவா்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். எனினும், சில பகுதிகளில் வீடுகளில் சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவா்களுக்கு மட்டும் வேறு இடத்தில் சமைத்து உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com