கடலூா் மாவட்டத்தில் 3,800 ஏக்கா் நெல், மணிலா மழையால் பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் 3,800 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மணிலா பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் 3,800 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மணிலா பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதேபோல, மணிலா, கரும்பு, உளுந்து, கம்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிா் வகைகள் சுமாா் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பா் 30 -ஆம் தேதி முதல் டிசம்பா் 2 -ஆம் தேதி வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பெரும்பாலான விவசாய நிலங்களில் ஒரு வாரம் வரை தண்ணீா் தேங்கியது.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறையினா் முதல் கட்ட கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளனா். இதில், மாவட்டத்தில் 2,800 ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியிருந்ததாகவும், தற்போது அது 2,400 ஏக்கராக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, மணிலா 1,800 ஏக்கா் வரை தண்ணீரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1,400 ஏக்கராகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், சுமாா் 2,900 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வேளாண்மைத் துறை சாா்பில் கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட நிலையில், அவற்றை வருவாய்த் துறையினா் முறையாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.

தற்போது, வருவாய்த் துறையினா் உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் அவா்களால் ஈடுபட முடியவில்லை.

இதனால், 10 நாள்களுக்கும் மேலாக தண்ணீா் தேங்கி, வேரில் அழுகல் ஏற்பட்ட நிலையில், தண்ணீா் வடிந்துவிட்டதாகக் கூறி, பாதிப்பாக ஏற்க மறுக்கப்பட்டு வருகிாம். இதனால், விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, விரைந்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயச் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com