ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு
By DIN | Published On : 14th February 2019 08:57 AM | Last Updated : 14th February 2019 08:57 AM | அ+அ அ- |

கடலூரில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
கடலூர் துறைமுகம் ஆற்றங்கரை வீதியைச் சேர்ந்த சக்கரபாணி மகன் கோகுலகிருஷ்ணன் (36). இவர், செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியிலுள்ள உப்பனாற்றுக்குச் சென்றார். அங்கு, இயற்கை உபாதையை கழித்தபோது ஆற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது.
இதில், கோகுலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் சடலத்தை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், அன்று மாலை கோகுல
கிருஷ்ணனின் சடலம் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து சக்கரபாணி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.