சிதம்பரத்தில் ரூ.13 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்களிடம் ரூ.13 லட்சம் ஹவாலா பணம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்களிடம் ரூ.13 லட்சம் ஹவாலா பணம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. 
சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் தமிழ்வாணன், சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து மற்றும் போலீஸார் திங்கள்கிழமை சோமசுந்தரம் தெருவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லிடப்பேசியில் பேசியபடி வந்த 2 இளைஞர்களை மறித்தனர். ஆனால், போலீஸாரைக் கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனர். போலீஸார் அவர்களை துரத்திப் பிடித்தனர். 
அவர்களிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஹவாலா பணம் ரூ.13 லட்சத்து 9 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள்  சிதம்பரம் அருகே உள்ள சந்தப்படுகை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சீனுவாசன் (23), காசிநாதன் மகன் ஜகன்ராஜ் (21) ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களுக்கு பணம் எப்படி கிடைத்தது என போலீஸார் கேட்டபோது, சிங்கப்பூரில் வசிக்கும் உறவினர் அருள்செல்வம் அனுப்பியதாக தெரிவித்தனராம். ஆனால் பணம் எப்படி வந்தது என தெரிவிக்கவில்லையாம். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com